அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி அறிவித்துள்ளார்…
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஈரான் அரசு அறிவிப்பு.
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி அறிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் கடந்த பிப். 28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.
AdvertisementAdvertise with us
இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்துவதால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவது இனி தங்களது அஜெண்டாவில் இல்லை எனவும், மேற்காசியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தொடரும் எனவும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி உள்பட 1,300-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More Stories
சவுதி அரேபியா, குவைத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
“ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது இருபது மடங்கு தாக்குதல்” – ட்ரம்ப் எச்சரிக்கை
நேபாள ஜென்ஸீ போராட்டம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு