டெஹ்ரான்: ஈரானின் ராணுவ இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவு அருகே அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரீப்பர் ரக ட்ரோனை, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆராஷ்-இ-கமன்கீர்’ என்ற வான் பாதுகாப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ட்ரோனின் மதிப்பு 30 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. அவற்றை ரேடார்களின் உதவியில்லாமல், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழத்தியதாக ஈரான் கூறியுள்ளது. பாரசீக புராண நாயகன் ஆராஷ் பெயர் இந்த புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைக்கு சூட்டப்பட்டுள்ளது. இதை பெருமைப்படுத்தும் வகையில், டெஹ்ரானில், புகழ்பெற்ற பாரசீக வில் வீரன் ஆராஷின் உருவம் தாங்கிய விளம்பரப் பலகை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

More Stories
“அனைத்து நாடுகளுக்கும் ஏஐ பலன்கள் கிடைக்க வேண்டும்” – ஐ.நா பொதுச் செயலர்
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி குழுவில் ரகுராம் ராஜன் உட்பட 3 இந்தியர்கள் நியமனம்
சோமாலிய கடற்கொள்ளையரிடம் சிக்கிய 3 கப்பல்களை விடுவிக்க இறுதிகட்ட பேச்சு