அம்பாசமுத்திரம், பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை தொகுதிகளுக்கான தடை தொடரும் என்றும், அங்கு தேர்தல் வழக்குகள் முடிந்த பிறகே இடைத்தேர்தல் நடத்தலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை கோரிய பொதுநல வழக்கின் அடிப்படையில், முன்பு தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. முதல்வர் விஜய் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், தற்போது இரு தொகுதிகளுக்கு மட்டும் தடையை நீக்கியுள்ளது.

More Stories
ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு
“பல்கலை. துணைவேந்தர்களை தமிழக அரசே நேரடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”- அன்புமணி
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி