டெல்லி: ஐடிபிஐ வங்கியை வெளிநாடு நிறுவனத்திற்கு விற்க, ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள ராகுல் காந்தி மற்றும் ஊழியர் சங்கங்கள், இந்த விற்பனை முறையில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகள், மின்சார திட்டங்கள், நெடுஞ்சாலை போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நீண்ட கால கடன் வழங்கும் நோக்கில், இந்திய அரசால் 1964ல் தொடங்கப்பட்டது தான், ஐடிபிஐ கிங்ஃபிஷர், ஏபிஜி ஷிப்யார்ட், விடியோகான் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள் திரும்ப வராததால், வங்கி பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியது.
2018-19 இல் ஏல்ஐசி மற்றும் ஒன்றிய அரசு இணைந்து வங்கியை காப்பாற்ற ஆயிரக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர், அதன் பின் வங்கியின் நிலைமை சீரடைந்து, கடந்த சில ஆண்டுகளில் மீண்டும் லாப பாதைக்கு திரும்பியது, இந்நிலையில் கனடாவை சேர்ந்த ஃபேர்ஃபாக்ஸ் முதலீட்டு நிறுவனத்துக்கு, ஐடிபிஐ வங்கியின் 60.72% பங்குகளை 52.878 கோடி ரூபாய்க்கு விற்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது.
ஆனால் லாபத்தில் இயங்கும் ஒரு அரசு சார்ந்த வங்கியை, வெளிநாடு நிறுவனத்திற்கு விற்பதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சி மற்றும் சங்கங்களும் குற்றம் சாட்டுகின்றனர். தற்போதைய சர்ச்சைக்கு ஒரு முக்கிய காரணங்களும் உள்ளனர். அரசு தொடக்கத்தில் ஒரு பங்கின் குறைந்தபட்ச விலையாக 94 ரூபாய் 42 பைசா என கணித்தது, ஆனால் ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனம் 81 ரூபாய் தருவதாக கூறியதும், அரசு அவசர அவசரமாக வங்கியின் அடிப்படை மதிப்பை 75 ரூபாய் 99 பைசா வரை குறைத்ததாக விமர்சங்கள் முன்வைக்கப்படுகின்றன, மேலும் பங்குகளை விற்க, நிதி விதிகளில் தெளிவான வழி இல்லாததால், இரயில்வே கழிவு பொருட்களை ஏலம் விடும் விதிகளை பயன்படுத்தியதாகவும், வங்கியின் மதிப்பை செயற்கையாக குறித்து விட்டதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
மக்கள் பணத்தில் காப்பாற்றபட்ட வங்கியை என் தனியாருக்கு விற்க வேண்டும், ஊழியர்களின் வேலை பாதுகாப்பு மற்றும் இட ஒதுக்கீடு என்னவாகும் என ராகுல் காந்தியும், வங்கி சங்கங்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதே வேளையில் அனைத்து விதிகளும் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கணித்த விலையை விட அதிக தொகை கிடைப்பதால், அரசுக்கு எந்த நஷடமும் இல்லை என்றும் ஒன்றிய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

More Stories
ஐவிஎப் சிகிச்சையில் ஏற்பட்ட தோல்வி ‘மோசடி’ அல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து
துணை முதல்வர் சுனேத்ரா பவாருக்கு எதிராக என்சிபி தலைவர்கள் போர்க்கொடி
தீபாவளி: டெல்லியில் 2 நாட்கள் பசுமைப் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி