இந்தியாவிலேயே சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நகரங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் சமீப ஆண்டுகளாகவே பொதுமக்கள் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவயதினர் முதல் முதியவர்கள் வரை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளான நகரங்களின் பட்டியலில் மதுரை திருச்சி முதலிடம் பிடித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவில் இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொற்றாநோய்கள் வேகமாக அதிகரிப்பு

இந்த ஆய்வறிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த ஆய்வு குறித்து அப்பல்லோ குடும்பத்தின் தலைவர் மருத்துவர் பிரதாப் ரெட்டி கூறுகையில் ஆரோக்கிய பரிசோதனை என்பது பயப்பட வேண்டிய ஒன்று அல்ல மாறாது நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கான முக்கியமான நடைமுறைகள் என்று கூறினர். பொதுமக்கள் சரியான நேரத்தில் பரிசோதனை செய்தால் இதய நோய் புற்றுநோய் போன்றவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தன மொத்தத்தில் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஆரோக்கிய சோதனைகள் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்த முடியும் என்பதே இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம்

சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் ஆரோக்கிய மதிப்பீடு குறித்து அப்பல்லோ மருத்துவ குழு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது அதில், இளைஞர்களில் மூன்றில் இரண்டு சதவீதம் பேர் எதிர்காலத்தில் தொற்று நோய்களுக்கு ஆளாக்கும் அபாயத்தில் உள்ளது தெரிய வந்ததுள்ளது. மேலும் 5 பேரில் ஒரு சதவீத பேர் சர்க்கரை நோய் வர முந்தைய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வேலைக்கு செல்போனில் பெரும்பாலானவர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
தொற்று நோய் அதிகம் உள்ள நகரங்களில் திருச்சி முதலிடம்

மேலும் பத்தில் 8 சதவீதம் பேருக்கு உடல் எடை அதிகமாக உள்ளதாகவும் அவர்களில் பாதிபேருக்கு மேல் சர்க்கர நோய் ஆரம்ப நிலை அறிகுறிகள் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பெண்களிடையே மார்பக புற்றுநோய், ரத்த சோகை மற்றும் வைட்டமின் குறைபாடுகள் அதிகமாக இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வேண்டும் உள்ளது. இந்த மருத்துவ குழு நடத்திய ஆய்வில் தேசிய அளவில் இந்த நோய்களின் பரவலின் பட்டியலில் மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த நகரங்கள் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சென்னை உள்ளது இதற்கு அடுத்ததாக பெங்களூரு மற்றும் மும்பை நகரங்கள் உள்ளன.
5 வது இடத்தில் சென்னை

தொற்றாநோய்களின் தாக்கம் அதிகமாக காணப்படும் நகரங்களின் பட்டியலில் சர்க்கரை நோய் பரவலில் மதுரை 36 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது.அதனைத் தொடர்ந்து திருச்சி 34 சதவீதமும் சென்னை 25 சதவீதமும் பதிவாகியுள்ளது. உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக மதுரை மற்றும் சென்னை தலா 26 சதவீதத்துடன் காணப்படுகின்றன. திருச்சியில் இது 20 சதவீதமாக உள்ளது. ரத்த சோகை பாதிப்பில் சென்னை 38 சதவீதத்துடன் அதிகமாகவும். திருச்சி 32 சதவீதமும் ,மதுரை மாவட்டத்தில் 26 சதவீதமும் உள்ளது. உடல் பருமன் விஷயத்தில் திருச்சி 84 சதவீதத்துடன் முதலிடத்தில் இருப்பதுடன் மதுரை 83 சதவீதமும் சென்னை 77 சதவீதமும் பதிவாகியுள்ளது.

More Stories
தொகுதி மறுவரையறை விஷயத்தில் சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா நகர்கிறதா? – ஸ்டாலின் காட்டம்
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி
‘வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து 10 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை!’