புதுடெல்லி: இந்தியாவில் 180 நாட்களுக்கு மேல் தங்கி வசிக்க விரும்பும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான பதிவு விதிகளில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.
இதன்படி, 180 நாட்கள் தங்கும் காலம் முடிவடைந்த பிறகு பதிவு செய்வதற்கு பதிலாக, அவர்கள் அதற்கு முன்பே தங்களை பதிவு செய்து கொள்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட விதிகளின்படி, 180 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான கால அவகாசம் கொண்ட விசாக்களில் இந்திய வருவோர், அனுமதி காலத்தை நீட்டிக்க விரும்பினால், அவர்கள் 180 நாள் வரம்பு முடிவடைவதற்கு முன் எப்போது வேண்டுமானாலும் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த மாற்றங்கள் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் விதிகள் 2025-ல் செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்தியா வந்திறங்கியதில் இருந்து 180 நாட்கள் முடிந்த பிறகு, அடுத்த 14 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற முந்தைய நடைமுறைக்கு மாற்றாக இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த திருத்தப்பட்ட விதிகள் 180 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகும் விசாக்களை வைத்திருப்போருக்கும் பொருந்தக் கூடியது.

More Stories
“அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் அனுமதிப்பதில்லை” – குல்காம் படுகொலைக்கு உமர் அப்துல்லா கண்டனம்
இந்திய இளைஞர்களுக்கு தேவை வேலை வாய்ப்பு… ரீல்ஸ் அல்ல: காங்கிரஸ்
“இது ஒரு தொடக்கம்” – பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா கருத்து