September 21, 2026

‘நாங்கள் ஏழையாக வாழ வேண்டுமா?’ – பிஹார் எம்எல்ஏ மைதிலிக்கு ஆதரவாக கங்கனா கேள்வி

புதுடெல்லி: பிஹாரின் மது​பானி பகு​தி​யைச் சேர்ந்​தவர் மைதிலி தாக்​குர் (26). நாட்​டுப்​புற பாடகி​யான இவர் இந்​தி, வங்​கமொழி, மைதிலி, உருது, மராத்​தி, போஜ்புரி, பஞ்​சாபி, தமிழ், ஆங்​கிலம் உள்​ளிட்ட பல்​வேறு மொழிகளில் பாடும் திறன் பெற்​றவர். ஆன்மிக கச்​சேரி​களி​லும் அதி​க​மாக பங்​கேற்று வரு​கிறார்.

கடந்த 2025-ம் ஆண்டு பாஜக​வில் மைதிலி இணைந்​தார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அலிநகர் தொகு​தி​யில் அவர் வெற்றிபெற்​றார். எம்​எல்​ஏ​வான பிறகும் அவர் இசைக்கச்சேரிகளில் தொடர்ந்து பங்​கேற்று வரு​கிறார். அதன்மூலம் ரூ.50 முதல் ரூ.90 லட்​சம் வரை அவர் வரு​வாய் ஈட்டி வரு​கிறார். யூடியூப் வரு​வா்யும் கிடைக்​கிறது.

கார்​கள் மீது அதிக ஆர்​வம் கொண்ட மைதிலி புதிய சொகுசு கார்களில் வலம் வரு​வ்து வாடிக்கை. விநாயகர் சதுர்த்​தியை ஒட்டி கடந்த 15-ம் தேதி மும்​பை​யின் பிரபல லால்​பாக்சா ராஜா விநாயகர் பந்​தலுக்கு மைதிலி தாக்​குர் சென்​றார். அப்​போது அவர், ரோல்ஸ் ராய்ஸ் காரில் இருந்து இறங்​கி​னார். இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது. இதுதொடர்​பாக சிலர் எதிர்​மறை​யாக விமர்​சனம் செய்து வரு​கின்​றனர்.

“கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது மைதிலி தாக்​குர் தாக்கல் செய்த பிர​மாண பத்​திரத்​தில் ஒரு மோட்​டார் சைக்​கிளும் ரூ.3 கோடிக்​கான சொத்​துகளும் மட்​டுமே இருப்​ப​தாக குறிப்​பிட்டு இருந்​தார். ஆனால் இப்​போது அவர் ரூ.13 கோடி மதிப்​புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரில் வலம் வரு​கிறார்” என்று விமர்​சிக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த சூழலில் பாஜக எம்​பி​யும் நடிகை​யு​மான கங்​கனா ரனாவத் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: அரசி​யல்​வா​தி​கள் வசதி​யாக வாழ்​வது சிலருக்கு பிடிக்​க​வில்​லை. தற்​போது இளம்​வயது எம்​எல்ஏ (மை​திலி தாக்​குர்) ஒரு​வர் சொகுசு காரில் சென்​றதை சிலர் மோச​மாக விமர்​சித்து வரு​கின்​றனர். நாங்​கள் மக்​கள் சேவை​யில் ஈடு​பட்​டிருக்​கிறோம்.

தன்​னலம் இன்றி மக்​களுக்​காக சேவை செய்து வரு​கிறோம். அதே​நேரம் எங்​களது தொழில், தனிப்​பட்ட வாழ்க்​கை​யிலும் கவனம் செலுத்தி வரு​கிறோம். நாங்​கள் ஏழை​யாக வாழ வேண்​டும் என்று எதிர்​பார்ப்​பது எந்த வகை​யில்​ நியா​யம்​? இவ்​வாறு கங்​க​னா கேள்வி எழுப்​பியுள்​ளார்.

Spread the love