October 24, 2026

பிளிங்கிட் தளத்தில் வெறும் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரூ.3 லட்சம் விலையுள்ள ஐபோன் டியோ

புதுடெல்லி: பிளிங்கிட் தளத்​தில் ரூ.3 லட்​சம் விலை கொண்ட ஆப்பிள் ஐபோன் டியோ விற்​பனைக்கு வந்த வெறும் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்​தது. இதையடுத்து, “இந்தியா ஒரு பணக்கார நாடு” என இணை​ய​வாசிகள் சமூக வலை​தளங்​களில் கருத்து தெரி​வித்து வரு​கின்​றனர். ஆப்​பிள் நிறு​வனத்​தின் முதல் மடிக்​கக்​கூடிய ஸ்​மார்ட்​போனான ஐபோன் டியோ இந்​தி​யாவில் நேற்று விற்​பனைக்கு வந்​தது.

டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டிவாக் மாலில் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சாகேத் ஸ்டோரில் இந்த போனை வாங்க கூட்டம் அலைமோதியது. டெல்லி-என்​சிஆர் பகுதி​யில் பிளிங்​கிட் தளத்​தில் விற்​பனைக்கு வந்த இந்த போன் அனைத்தும் வெறும் 5 நிமிடங்​களில் விற்று தீர்ந்​து​விட்டது. ரூ. 3 லட்​சம் விலை கொண்ட இந்த ஸ்​மார்ட் ​போனை வாங்​கு​வதற்கு பயனாளர்களிடையே காட்​டப்​பட்ட அவசரம் தற்​போது சமூக வலை​தளங்​களில் பல்​வேறு விவாதத்தை கிளப்பியுள்​ளது.

இவ்​வளவு விலை உயர்ந்த போனை வாங்​கு​வதற்கு ஏற்​பட்​டுள்ள இந்த போட்டி இந்​தியா ஏழை நாடு அல்ல ஒரு பணக்​கார நாடு என்பதை காட்​டுவ​தாக பலர் கருத்​துகளை பதி​விட்​டுள்​ளனர். இன்னும் சிலர், “ஆப்​பிள் நிறு​வனம் அந்த போனின் விலையை ரூ.10 லட்​ச​மாக நிர்​ணயித்​திருக்க வேண்​டும். ஆனால் அப்​போதும் அது விற்றுத் தீர்ந்​திருக்​கும்” என்று கேலியாக பதி​விட்​டுள்​ளனர்.

பிளிங்​கிட்​டின் நிறு​வனர் அல்​பி​னிந்​தர் தின்சா வெளி​யிட்ட பதிவில், “ஆப்​பிள் ஐபோன் டியோ காலை 8.15 மணிக்கு விற்பனைக்கு வந்​தது. ஐந்து நிமிடங்​களுக்​குள் அனைத்து போன்களும் விற்​றுத் தீர்ந்து விட்​டது. வரும் வாரங்​களில் கூடுதல் ஸ்​டாக்கை கொண்டு வர நட​வடிக்கை எடுத்து வரு​கிறோம்” என்று தெரி​வித்​துள்​ளார்.

ஆப்​பிள் ஐபோன் டியோவின் ஆரம்ப விலை ரூ.2,99,900 ஆகும். மேலும், இதன் டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.4,49,900 வரை நிர்ணயிக்​கப்​பட்​டுள்​ளது.

Spread the love