நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் சுமார் 78 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ராசிபுரம் ஏரி . ஆக்கிரமிப்பு காரணமாக பல ஆண்டுகளாக நீரின்றி பற்றி கிடந்த இந்த ஏரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக நிரம்பிய நிலையில் தற்போது சொற்ப அளவில் நீர் எப்போதும் உள்ளது. இதில் வெளிநாட்டு பறவைகள் உட்பட நீர் பறவைகள் என தங்கி இனப்பெருக்கம் செய்கிறது.
இந்நிலையில் நீர் வற்றிய மற்ற பகுதிகள் வெயில் காரணமாக காய்ந்த நிலையில் புற்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது.
ஏரியில் உள்ள காய்ந்த புற்கள், செடிகள் எரிந்து அருகில் உள்ள விவசாய நிலப் பகுதிகளுக்குச் சென்றதில் தென்னை மரங்கள், சவுக்கு மரங்கள் உட்பட பல லட்சம் மதிப்பிலான மரங்களும் எரிந்து சேதமானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் . மேலும் இப்பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் இருந்து குடிப்பதற்காக ஏரிக்குள் வரும் நபர்கள் தீயை பற்ற வைத்ததாக கூறப்படும் நிலையில் ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது .

More Stories
கள் இறக்கிய தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு!
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமச்சந்திரன், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.