
சென்னை: தங்கம் விலை இன்று (பிப்.18) மேலும் குறைந்து ஒரு கிராம் ரூ.14,230-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (பிப்.18) காலை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,230-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,13,840-க்கு விற்பனை ஆகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,180-க்கும் பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.97,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.
பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.46 குறைந்து ஒரு கிராம் ரூ.5,942-க்கு விற்பனையாகிறது.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்