ராசிபுரம் அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.4 லட்சத்து 92 ஆயிரம் பறிமுதல்….
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து ராசிபுரம் அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.4 லட்சத்து 92 ஆயிரம் பணத்தை நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.இதன் படி உரிய ஆவணங்கள் இன்றி அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் உள்ள லயோலா கல்லூரி அருகே
வேளாண்மை பொறியல் துறையைச் சார்ந்த பிரபின் குமார் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கே வந்த முட்டை லாரியை நிறுத்தி சோதனை செய்த போது உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 4 லட்சத்து 92 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய அதிகாரிகள் அந்த பணத்தை ராசிபுரம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று லாரி ஒட்டுனர் வசந்தகுமாரிடம்
தீவிர விசாரணை மேற்க்கொண்டனர்.
விசாரணையில் நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான பவுல்டரி பார்மில் இருந்து ரூ 4 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள முட்டை லோடு ஏற்றிக் கொண்டு சென்னையில் இறக்கி விட்டு பணம் பெற்று வந்ததாக தெரியவந்தது.
இதனை அடுத்து தவலறிந்து நேரில் வந்த பவுல்ட்ரி பார்ம் உரிமையாளரிடம் ஆய்வு செய்த அதிகாரிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என
அறிவுறுத்தினர்.

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி