இராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 25 ஊரணிகளை புனரமைத்து மேம்படுத்தும் திட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கே. கார்மேகம் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்தத் திட்டத்தின் மூலம் நகராட்சியில் உள்ள ஊரணிகள் புனரமைக்கப்பட்டு மழைநீர் சேமிப்பு மேம்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராமநாதபுரம்

More Stories
10-08-2026
நெருப்பெரிச்சல் மண்டல் சார்பில் தேசியக்கொடி ஊர்வலம்,,
பழனியில், 50 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவ மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.