நாமக்கல்:இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் முழு கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் இல்லாமல் இருந்தது. கிடைக்கும் இடங்களில் எல்லாம் மாணவர்கள் தங்கள் விளையாட்டு தாகத்தை தீர்த்து கொண்டு வருகின்றனர்.

2021ம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, மாண்புமிகு அண்ணன் திரு. Udhayanidhi Stalin அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையை கையில் எடுத்தவுடன், தொகுதிக்கு ஒரு MiniStadium என்ற கொள்கை முடிவை அறிவித்தவுடன், மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களின் சிறப்பு கவனத்திற்கு கொண்டு சென்று, நம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள இடத்தில் ரூ. 3.00 கோடி மதிப்பீட்டில் Turf + 9X9 Synthetic BasketBall Court, InDoor Shuttlecock Court, Hi-tech Zym, Toilets உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுவருகிறது.
அமையும் திராவிட மாடல் 2.O ஆட்சியில், திறப்பு விழா காணப்போகும் நமது இராசிபுரம் விளையாட்டு அரங்கும், இராசிபுரம் தொகுதியை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமும் – பயிற்சியும் தந்து, பல விளையாட்டு வீரர் – வீராங்கனைகளை உருவாக்கி, மிகப்பெரிய #SportsHub ஆக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்