April 17, 2026

ஈரோடு மாவட்ட தொழில் வர்த்தக சபையில் வேட்பாளர் அறிமுக கூட்டம்!

ஈரோடு மாவட்டத்தில் தொழில், வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கில் “சட்டமன்ற தேர்தல்” ஈரோடு மாவட்ட  வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (EEDISSIA), CII, ஈரோடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் ஒளிரும் ஈரோடு ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின.

இந்த கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தின் தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காக கீழ்க்கண்ட முக்கிய கோரிக்கைகளை, சட்டமன்ற வேட்பாளர்களின் கவனத்திற்கு EEDISSIA சார்பில் முன்வைக்கப்பட்டது. தாங்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தாங்கள் முன் வைத்த இக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Spread the love