ஈரோடு, செப். 16 –
சுகாதாரத்தில் உலக அளவில் பிரசத்தி பெற்ற “ஆன்செல்” நிறுவனம் மருத்துவ பயன்பாட்டிற்கான கையுறை தயாரிக்கும் ஆலையை பெருந்துறை சிப்காட் தொழில் பேட்டையில் நிறுவினர். ஆபரேஷன் தியேட்டர்களில் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் இந்த கையுறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் நோயாளிகளுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) வழிகாட்டுதலுடன் துவக்கப்பட்ட இந்த ஆலை குறித்து ஆன்செல் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜெனிபர் ராஸ்-மர்பி கூறுகையில் எங்களின் இந்த ஆலை முழு வீச்சில் செயல்படும் அதிக அளவில் உற்பத்தி ஆகும் நேரத்தில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு சந்தைப்படுத்தப்படும். தொடர்ந்து சிறப்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் என்று கூறினார்.

More Stories
கரூர் மாவட்டம்
திருப்பூர்
16-09-2026