பெருந்துறை, ஆக, 18 : வெள்ளி விழா கொண்டாடி வரும் நந்தா பொறியியல் கல்லூரியில் முதுகலைத் துறைகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா முதுகலை துறைகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் மற்றும் இளங்கலை இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை பெற்றவர்களுக்கான வகுப்புகளின் துவக்க விழா இனிதே நடைபெற்றது.
இவ்விழாவினை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி. சண்முகன் தலைமையேற்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இவ்விழாவில் ஈரோடு லயன்ஸ் கிளப்பின் முன்னாள் சர்வதேச இயக்குனர் ஜே சி கே. தனபாலன் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவரும் கோவை ஈ.பி.ஏ.எம் நிறுவனத்தின் பொறியாளர், மீனாட்சி சுந்திரம் கௌரவ விருந்தினராகவும் கலந்துக் கொண்டார்கள்
பின்னர், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் எஸ். திருமூர்த்தி, கல்லூரியின் முதல்வர் முனைவர் யு.எஸ். ரகுபதி மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் ஏ.கே. வேலுசாமி ஆகியோர் முதல் மற்றும் இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களையும், பெற்றோர்களையும் வரவேற்று வாழ்த்தியும் பேசினார்கள். முன்னதாக முதுகலை நிர்வாகத் துறையின் இறுதியாண்டு பயிலும் மாணவி வி. தர்ஷனா வரவேற்றார்.
நிகழ்வின் முடிவில் முதுகலை கணினித் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவி என். நந்தினி நன்றி கூறினார்.
இவ்விழாவினை ஏற்பாடு செய்திருந்த முதுகலை நிர்வாகத் துறையின் தலைவர் முனைவர் டி.பி. சரவணன், கணினித் துறையின் தலைவர் முனைவர் ஆர். சுகுணா, பேராசிரியர்கள் மற்றும் முதுகலை முதலாமாண்டு மாணவர்கள், நேரடி சேர்க்கைப் பெற்ற 2 – ஆம் ஆண்டு மாணவர்கள் உட்பட அனைவருக்கும் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் பானுமதி சண்முகன் எஸ்.நந்தகுமார் பிரதீப் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.

More Stories
ஈரோடு
தேனி மாவட்டம்
ஈரோடு