October 6, 2026

கழிவு நீர்  குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கரூர் அக்6

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, புகழூர், செம்படாபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை நிறுவனமான பாரி சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மிகவும் நச்சுத் தன்மையுடன் இருப்பதாகவும், 

இதனால், கரூர் ஒன்றியதிற்கு உட்பட்ட புஞ்சை தோட்டக்குறிச்சி, கடம்பங்குறிச்சி, நன்னியூர், வாங்கல் ஆகிய பகுதிகளில்,  நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம், குடிதண்ணீர் அனைத்தும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட மக்களின் முக்கிய பிரதிநிதிகளுடன், மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் ஆகிய நானும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியாரிடம் புகார் மனுவை அளித்து, பாதிப்புகள் குறித்து எடுத்துக்கூறி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்.பாசன வாய்க்காலில் கழிவு நீரை வெளியேற்றுவதற்கு விடமாட்டோம் என்று அதிமுக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

Spread the love