September 26, 2026

உக்​ரைனுக்கு எதி​ரான போரில் இந்தி​யர்​கள் உள்பட 47 நாடுகளின் குடிமக்களை பயன்படுத்தும் ரஷ்யா: ஜெலன்ஸ்கி

நியூ​யார்க்: உக்​ரைனுக்கு எதி​ரான போரில் இந்​தி​யா உள்பட 47 நாடு​களின் குடிமக்​களை ரஷ்யா பயன்​படுத்​து​வ​தாக உக்​ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐ.நா. பொதுச்​சபை​யில் குற்​றம் சாட்​டி​னார்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 81-வது ஐ.நா. பொதுச் சபை கூட்​டம் நடை​பெற்று வரு​கிறது. நேற்று முன்​தினம் நடை​பெற்ற கூட்​டத்​தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்​ஸ்கி பேசி​ய​தாவது: உக்ரைனுக்கு எதி​ரான போரில் இந்​தி​யா, நேபாளம், தஜிகிஸ்தான், ஏமன், கென்​யா உள்பட 47 நாடு​களின் குடிமக்களை ரஷ்யா பயன்​படுத்தி வருகிறது. சில வெளி​நாட்டு குடிமக்​கள் ஏமாற்​றப்​பட்டு ரஷ்யாவுக்கு சென்​றனர். அவர்​கள் வலுக்​கட்டாய​மாக போரில் ஈடுபடுத்​தப்​படு​கின்​றனர். இதுகுறித்து சம்​பந்​தப்​பட்ட நாடு​கள் உடனடி​யாக கவனம் செலுத்த வேண்​டும்.

இது தொடர்​பாக இந்த 47 நாடு​களின் ஒவ்​வொரு பிர​தி​நி​தி​யிட​மும் நான் நேரடி​யாகப் பேச விரும்​பு​கிறேன். புதின் உங்​களை இந்​தப் போருக்​குள் இழுக்க அனு​ம​திக்​காதீர்​கள். உங்​கள் மக்​களை வைத்து ரஷ்யா என்ன செய்​கிறது என்​பது உங்​களுக்​குத் தெரி​யும். அவர்​கள் உங்​கள் குடிமக்​கள். அவர்​களைப் பாது​காத்​துக் கொள்ளுங்​கள், அவர்​களை போர்க்​களத்​தில் சிக்க விடாதீர்​கள். வரவிருக்​கும் குளிர்​காலம் உக்​ரைன் மக்​களுக்கு சவாலாக இருக்கும் என்​பதை ஒப்​புக் கொள்​கிறேன்.

உக்​ரைன் மீது நடை​பெறும் தாக்​குதல்​களுக்கு ரஷ்யா விலை​கொடுக்​கும் வகை​யில் நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும். குறிப்​பாக உக்​ரைனின் மின்​சா​ரம் மற்​றும் எரிசக்தி கட்​டமைப்பு​கள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்​குதல் நடத்​தி​னால், அதற்கு பதிலடி​யாக ரஷ்​யா​வின் எரிசக்தி நிலை​யங்​கள் மீது உக்​ரைன் தாக்​குதல் நடத்தும்.

போருக்​கான நிதி ஆதா​ரங்​களை கட்​டுப்​படுத்​து​வதே உக்​ரைனின் நோக்​கமே தவிர, ரஷ்​யா​வின் எரிபொருள் விநி​யோகத்தை முற்றிலும் அழிப்​பது அல்ல. இவ்​வாறு அவர் பேசினார்.

Spread the love