வாஷிங்டன்: உலக நாடுகள் மிகவும் ஆவலு டன் எதிர்பார்த்த அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் இதுவரை வெளியான முடிவுகளில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
அதிபர் ட்ரம்பின் ஆளும் குடியரசு கட்சி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள் ளது. இது ட்ரம்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஜனநாயகக் கட்சி ஆதரவின்றி எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத சூழல் ஏற்படும் என கருதப்படுகிறது.
குடியரசு கட்சியின் தோல்வியை விமர்சிக்கும் வகையிலான மீம்ஸ்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் பழைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் புயலெனக் குவிந்து வருகின்றன.
நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் குடியரசுக் கட்சியின் வசமிருந்த முக்கிய தொகுதிகளைக் கைப்பற்றிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, கீழவையான பிரதிநிதிகள் சபையையும் தன்வசமாக்கி பிரம்மாண்ட ‘நீல அலை’ வெற்றியப் பதிவு செய்துள்ளது.
அதிபர் ட்ரம்பின் எஞ்சிய 2 ஆண்டு பதவிக் காலத்தில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அதிகாரத்தையும் ஜனநாயகக் கட்சியிடம் அமெரிக்க வாக்காளர்கள் ஒப்படைத்துள்ளனர். முழு அதிகாரமும் ஒரே கட்சியின் கைக்கு மாறியிருப்பது, ட்ரம்ப் நிர்வாகத்துக்கும் குடியரசுக் கட்சிக்கும் விழுந்த பலத்த அடியாக கருதப்படுகிறது.
இதனிடையே, தேர்தல் முடிவுகளை ஏற்பதாகவும், ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

More Stories
அமெரிக்காவின் ஓஹியோ ஆளுநர் தேர்தலில் விவேக் ராமசாமி தோல்வி
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: செனட் சபையை இழந்தது ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: மேற்காசியாவில் பதற்றம்