June 27, 2026

என்எல்சி பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சிபிஎம் , தவாக வலியுறுத்தல்

சென்னை: என்​எல்​சி​யின் பங்​கு​களை விற்​பனை செய்​யும் முடிவை மத்​திய அரசு திரும்​பப்​பெற வேண்​டும் என மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன் ஆகியோர் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

பெ.சண்​முகம்: தமிழகத்​தின் மின்​சா​ரத் தேவையை பூர்த்தி செய்​தல், வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​குதல் மற்​றும் மாநில பொருளா​தார கட்​டமைப்பு வளர்ச்​சிக்கு முக்​கிய பங்​காற்​று​தல் என நெய்​வேலி பழுப்பு நிலக்​கரி நிறு​வனம் (என்​எல்​சி) நிகழாண்​டில் ரூ.3,670 கோடி லாபத்தை ஈட்​டி​யுள்​ளது.

இந்​நிலை​யில் இந்​நிறு​வனத்​தின் மூன்று சதவீத பங்​கு​களை விற்​பனை செய்ய மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. இது பொதுத்​துறை நிறு​வனங்​களை சீரழிக்​கும் செய​லாகும்.

நாட்​டில் லாபம் ஈட்​டிவரும் நவரத்​தின பொதுத்​துறை நிறு​வனங்​களை தேசிய பணமய​மாக்​கல் திட்​டம் என்ற பெயரில் தனி​யாருக்கு தாரை வார்த்து வரு​வதன் தொடர்ச்​சி​யே, என்​எல்சி நிறு​வனத்​தின் பங்​கு​களை​யும் விற்க முடிவு செய்​திருப்​ப​தாகும். என்எல்சியின் பங்கு விற்​பனை செய்​யும் முடிவை மத்​திய அரசு உடனடி​யாகத் திரும்​பப்​பெற வேண்​டும்.

தி.வேல்​முரு​கன்: நெய்​வேலி​யில் கடந்த 50 ஆண்​டு​களாக லாபத்​தில் இயங்​கிவரும் என்​எல்சி நிறு​வனம், தமிழகத்​தில் இருந்து கிடைக்​கும் லாபத்தை கடந்த 2002-ல் 49 சதவீதம், 2006-ல் 10 சதவீதம், 2013-ல் 5 சதவீதம் என விற்​பனை செய்ய முயற்​சித்​தது. ஆனால் அரசி​யல் இயக்​கங்​கள் ஒன்​றிணைந்து குரல் கொடுத்​ததன் விளை​வாக அந்த முயற்​சிகள் தடுக்​கப்​பட்​டன.

3 சதவீத பங்​கு​கள்

இந்​நிலை​யில் என்​எல்​சி​யின் 3 சதவீத பங்​கு​களை விற்​பனை செய்ய மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. இந்த முடிவை மத்​திய அரசு மறு​பரிசீலனை செய்​ய​வேண்​டும். இல்​லை​யெனில், இதை எதிர்த்து தவாக கட்சி போ​ராட்​டத்​தில் குதிக்​கும். இவ்​வாறு அவர்​கள்​ கூறி​உள்​ளனர்​.

Spread the love