March 18, 2026

“என்னால் எதையும் செய்ய முடியும்”.. கியூபாவை கைப்பற்றுவது பற்றி டிரம்ப் சூசகம்!

நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கியூபாவைக் கைப்பற்றுவது குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளதைப் பற்றி…

நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கியூபாவைக் கைப்பற்றுவது குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

உலகளவில் நடைபெற்று வரும் போர்களை நிறுத்தி உலக அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

உக்ரைன் – ரஷியா, இந்தியா – பாகிஸ்தான் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் போர்களுக்கு மத்தியஸ்தம் செய்து போரை நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் கூறிவரும் டிரம்ப், ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என முன்னெடுப்பின் படி, ‘அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக மாற்றுவோம்’ என மிக வேகமாக செயல்பட்டு வருகிறார்.

அதன்படி, வெனிசுவேலாவின் அதிபர் மதுரோவை போதைப் பொருள் வழக்கில் கைது செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது கனடா மற்றும் கிரீன்லாந்து மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அதேவேளையில், உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அணுஆயுதக் கொள்கையில் ஈடுபட்டுவரும் ஈரான் மீது போர் தொடுத்து கடந்த இரண்டு வாரத்துக்கும் மேலாக கடும் தாக்குதலை நடத்தி வருகிறார் டிரம்ப்.Advertise with us

இந்தக் கடும் போர்ப்பதற்றத்துக்கு மத்தியில், உலகின் சர்க்கரை கிண்ணம் என்றழைக்கப்படும் தீவு நாடான கியூபா மீது தனது பார்வையைத் திருப்பி இருக்கிறார் டிரம்ப்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “வாஷிங்டன் ஹவானாவுடன் (கியூபா தலைநகர்) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், எந்த வகையில், கியூபாவைக் கைப்பற்றும். அந்த கௌரவம் எனக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.Advertise with us

அதாவது, நான் கியூபாவைத் தனியாக விட்டாலும் சரி, கைப்பற்றினாலும் சரி, நான் விரும்பியதை எல்லாம் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்” என்றார்.

ஈரான், வெனிசுவேலா போலவே கியூபாவும் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதற்கு மத்தியில், கியூபாவின் தலைமையை மாற்ற பொதுமக்களும் அமெரிக்காவும் விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அமெரிக்கா – கியூபா இடையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்குப் பின்னர், மிகேல் டையஸ் கெனல் கியூபாவுக்குத் தலைமை வகித்து வருகிறார். கியூப அதிபர் மிகேல் டையஸ் கெனலைப் பதவியில் இருந்து நீக்குவதை அமெரிக்கா முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளதுAdvertise with us

எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் மின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளால் கியூபாவில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ள. ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்குப் பின்னர் பல ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளை கியூபா சந்தித்து வரும் வேளையில், அதிபர் டிரம்ப்பின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Spread the love