கொல்கத்தா: மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடி சமீபத்தில் சென்றபோது, கொல்கத்தாவின் கிரிஷ் பார்க் பகுதியில் அமைச்சர் ஷாஷி பாஞ்சா வீட்டின் மீது சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு எதிராக கொல்கத்தாவில் திரிணமூல் சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. இதில் மம்தா பானர்ஜி பேசியதாவது: அமைச்சர் ஷாஷி வீட்டின் மீது கல்வீச்சு நடத்தியதற்காக பாஜக வெட்கப்பட வேண்டும். முடிந்தால் என் வீடு மீதும், திரிணமூல் தலைவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்துங்கள். அதை எப்படி தடுக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும். இவ்வாறு மம்தா பேசினார்.

More Stories
“அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் அனுமதிப்பதில்லை” – குல்காம் படுகொலைக்கு உமர் அப்துல்லா கண்டனம்
இந்திய இளைஞர்களுக்கு தேவை வேலை வாய்ப்பு… ரீல்ஸ் அல்ல: காங்கிரஸ்
“இது ஒரு தொடக்கம்” – பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா கருத்து