June 5, 2026

எஸ் ஜே சூர்யா படப்பிடிப்பில் விபத்து… ஒருவர் பலி!| Killer | S J Suryah

உடனடியாக அருகில் இருந்த சக ஊழியர்கள் நால்வரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ படத்தின் ஓட்டேரி பி&சி மில் வளாக படப்பிடிப்பில் அதிகாலை 3.30 மணிக்கு கேஸ் பலூன் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதில் தொழில்நுட்ப கலைஞர் மதன் (26) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சக்திவேல், சூர்யா, தினகரன் ஆகிய மூவர் காயமடைந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்து வரும் படம் ‘கில்லர்’. பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஓட்டேரி பகுதியில் உள்ள பி&சி மில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இப்படப்பிடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.

killer movie

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த கேஸ் பலூன் சிலிண்டர் திடீரென வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றி வந்த மதுரவாயலைச் சேர்ந்த மதன் (26) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், குன்றத்தூரைச் சேர்ந்த சக்திவேல் (27), மதுரவாயலைச் சேர்ந்த சூர்யா (23), நெற்குன்றத்தைச் சேர்ந்த தினகரன் (24) ஆகியோர் காயமடைந்தனர்.

உடனடியாக அருகில் இருந்த சக ஊழியர்கள் நால்வரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த சக்திவேல், சூர்யா மற்றும் தினகரன் ஆகிய மூவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love