பழனி பாதையாத்திரை பக்தர்களுக்கு 2 ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விழா
ஒட்டன்சத்திரம் பிப்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் பிரிவு அருகில் சர்வேஷ் பல் மருத்துவமனை மற்றும் ஜெ.பி.எஸ் பத்திரம் எழுதும் நிறுவனம் சார்பில் பழனி பாதையாத்திரை செல்லும் பக்தர்களுக்கு 2 – வது ஆண்டாக அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.
ஜெ.பி.எஸ் பத்திரம் எழுதும் நிறுவனம் ஜெ.பி.எஸ் சக்தீஸ்குமார், வி.பிரியதர்ஷினி சார்பாகவும், கள்ளிமந்தையம் ஜெ.பி.எஸ் செல்வராஜ் – சுப்புலட்சுமி குடும்பத்தார்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் சர்வேஸ் பல் மருத்துவமனை டாக்டர் எஸ்.அஸ்வினி, தென்னக இரயில்வே ஏ.இ. ஜெ.பி.எஸ் சரவணக்குமார் குடும்பத்தார்கள்;, மாஸ்டர்கள் எஸ்.சர்வேஸ், எஸ்.சர்வந்ஜெய் சார்பாகவும் பழனி பாதையாத்திரை பக்தர்கள் சுமார் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் க.திருமலைசாமி, வெரியப்பூர் கருப்புச்சாமி, தங்கச்சியம்மாபட்டி ஆறுமுகம், சமூக ஆர்வலர்கள் ஆ.இளங்கோவன், எம்.விஜய்கார்த்திக், மதுரை மணி சே.சதீல்குமார், தமிழ்சுடர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

More Stories
நீலகிரியில் ரூ.2.59 கோடி பணம், தங்கம் பறிமுதல்.. சுற்றுலா செல்பவர்கள் கவனமுடன் செயல்பட எச்சரிக்கை!
போத்தனூர் – கரூர் புதிய ரயில் பாதை: சேலம் கோட்டத்திற்கு பயணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு செய்த புகைப்படம்