ஒட்டன்சத்திரம்,
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் ஓட்டம் (ODC Run) சார்பில் நம்ம மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு வயதுடைய ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சுமார் 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் ஓட்டப் போட்டியை ஒட்டன்சத்திரம் கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களில் முதல் பரிசை சரவணகுமாரும், இரண்டாம் பரிசை சுகுமாரும், மூன்றாம் பரிசை சரவணன் சின்னச்சாமியும் பெற்றனர். சிறப்புப் பரிசை ராமகிருஷ்ணன் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அம்மன் மருத்துவமனை டாக்டர்.சக்திவேல், இந்திய மருத்துவக் கழக ஒட்டன்சத்திரம் கிளைச் செயலாளர் டாக்டர். ஏ.ஆசைத்தம்பி, டாக்டர் சரண்யா சண்முகராஜ், கே.டி. மருத்துவமனை டாக்டர் ரகுராமன், பட்ஸ் பள்ளித் தாளாளர் பொன். கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களையும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்பல்லோ டயக்னாஸ்டிக்ஸ் ரோகேஷ் மற்றும் எஸ்.கே. ஆர்த்தோ சுரேஷ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

More Stories
பரணி பார்க் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
16-11-2026
16-11-2026