ஒட்டன்சத்திரம் ஜூலை.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒட்டன்சத்திரம் வட்டார கிளையின் தலைவர் இரா.பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ப.ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்து கூறியாதாவது. பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.
அதற்கான சட்ட திருத்தங்களை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டும்.
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தகுதி தேர்வு கூடாது என சட்ட திருத்தம் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும். தமிழகத்தில் நடைபெற்றுள்ள அரசு தகுதி தேர்வை முழுவதுமாக ரத்து செய்து தற்போதைய நிலையில் ஆசிரியர்களின் பணி அனுபவங்களையும் கணக்கில் கொண்டு பணிக்காலத்திற்கேற்ற வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கூறினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர்
க.நிர்மலா, துணைத்தலைவர் இரா.மணி, துணைத்தலைவர் பேபி விஜய பாரதி, துணைச் செயலாளர் கா.சீதா ஜெயலட்சுமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இரா. முத்துராமன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சு.சண்முகம் உள்ளிட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒட்டன்சத்திரம் வட்டார கிளையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.கண்டன ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒட்டன்சத்திரம் கிளையின் செயற்குழு உறுப்பினர் கு. சண்முகவேல் நன்றி தெரிவித்தார்.

More Stories
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை
பழனியில் நில மோசடி வழக்கு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளரை சந்தித்த நிர்வாகிகள்