November 10, 2026

ஒட்டன்சத்திரத்தில் திரைப்பட துணை நடிகர்கள் சங்கம் சார்பில் தீபாவளி இனிப்பு, காரம் வழங்கும் விழா!

ஒட்டன்சத்திரம், நவ-6

திண்டுக்கல் மாவட்ட திரைப்பட துணை நடிகர்கள் சங்கம் சார்பில், 4-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் வழங்கும் விழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் சார்பில் மா. சௌந்தரராஜன் தலைமை தாங்கினார். எம். ராமராஜ், செல்வம், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் ஜோதி முருகன் (சுரபி கல்வி நிறுவனம்), மாடசாமி (முன்னாள் வங்கி ஊழியர் சங்க நிர்வாகி), முனைவர் நடராஜ், நேதாஜி செந்தில், ஏ.எஸ்.ஆர். ராமமூர்த்தி (லொகேஷன் மேனேஜர்), செல்லப்பாண்டி (பைனான்சியர்), செந்தில் (நேதாஜி ரத்ததான இயக்கம்), சிவா, அந்தமான் ராஜா (ஒளிப்பதிவாளர்), குகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் இனிப்பு மற்றும் கார வகைகள் வழங்கப்பட்டன.

Spread the love