November 10, 2026

பாவை அறக்கட்டளை சார்பில் தீபாவளி நலத்திட்ட உதவி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை மையமாகக் கொண்டு காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றோர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நலிவடைந்த மக்களுக்கு தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பாவை அறக்கட்டளை சார்பில் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதில் வேட்டி, சட்டை, துண்டு, சேலை உள்ளிட்ட ஆடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் ஜெயஹரிபிரசாத், மூத்த சட்ட உதவி வல்லுநர் மணிமேகலை, வழக்கறிஞர் அருள்ஜெயபிரியா, ஐ சி டி சி ஆலோசகர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை பாவை அறக்கட்டளையின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் சிறப்பாகச் செய்திருந்தார். இந்நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

Spread the love