ஒட்டன்சத்திரம் ஜூலை.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் முன்னாள் ஒட்டன்சத்திரம் தலைமை மருத்துவர் டாக்டர்.ஏ.ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் ஒட்டன்சத்திரம் வாக்கிங் கிளப் தலைவர் ஆர்.வேலுச்சாமி வரவேற்று பேசினார். இதில் சமூக ஆர்வலரும், நேதாஜி இளைஞர் நற்பணி மன்றத் தலைவருமான பி.ஆறுமுகம், மதுரை மணி சே.சதீஸ்குமார், ஒட்டன்சத்திரம் ஸ்டார் மொபைல்ஸ் பி.சிவசாமி, முக்கிய பிரமுகர் ஆர்.சதாசிவம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதில் மருத்துவப் பணியில் சிறப்பாக சேவை பணி செய்துவரும் ஒட்டன்சத்திரம் தலைமை மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவரும், ஐ.எம்.ஏ ஒட்டன்சத்திரம் கிளைச் செயலாளருமான டாக்டர்.ஏ.ஆசைத்தம்பி அவர்களுக்கு ஒட்டன்சத்திரம் வாக்கிங் கிளப் தலைவர் ஆர்.வேலுச்சாமி சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

More Stories
ஒட்டன்சத்திரம் – பெரியகோட்டை கிராமத்தில் விவசாய நிலத்தில் தார்சாலை பணி முதல்வர் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பாளையக்காட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா
பழனி பெரியாவுடையார் சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் ஸ்ரீ கந்த விலாஸ் என் செல்வகுமார் பங்கேற்பு