October 29, 2026

ஒட்டன்சத்திரத்தில் முன் அறிவிப்பின்றி மின்தடை: பொதுமக்கள் அவதி!

ஒட்டன்சத்திரம், அக்.-29 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முன் அறிவிப்பு இன்றி மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வீடுகள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டன. மின்சாரத்தை நம்பி தொழில் செய்து வரும் வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மின்தடை ஏற்படுவது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால், அதற்கேற்ப தங்களது பணிகளைத் திட்டமிட்டிருக்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே, மின்தடை ஏற்படும் சூழலில் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும், தடையற்ற மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love