July 28, 2026

ஒட்டன்சத்திரத்தில்

மாமன்னர் சாலிய வாகணன் தெலுங்கு குலாலா சமுதாய நல அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழா

ஒட்டன்சத்திரம் ஜூலை.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை பி.என்.கே திருமண மஹாலில் மாமன்னர் சாலிய வாகணன் தெலுங்கு குலாலா சமுதாய நல அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழா, 10,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்விப்பரிசு வழங்கும் விழா மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு தலைவர் எம்.சண்முகம் தலைமை வகித்தார். வருகை தந்த அனைவரையும் செயலாளர் பொறியாளர் கே.எஸ்.கே நாகராஜன் வரவேற்று பேசினார். விழாவில் பொருளாளர் கே.குழந்தைவேல் கலந்துகொண்டு வரவு செலவு தாக்கல் செய்தார். நிகழ்ச்சிகளை துணைத்தலைவர் எ.பால்ராஜ், துணைச்செயலாளர் பி.செல்வராஜ், இணைச்செயலாளர் எம்.முருகானந்தம் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். 

நிகழ்ச்சிகளை கௌரவ ஆலோசகர் கே.தங்கவேல் தொகுத்து வழங்கினார். இதில் வழக்கறிஞர் எம்.கோகுல், கே.மனோகரன், எ.தங்கராஜ், பி.பொன்னுச்சாமி, பி.ராமசாமி, எம்.பெருமாள், பி.வீராச்சாமி, கே.கந்தவேல், என்.ரஞ்சன் (எ) ராமசாமி, சி.முருகேசன், எம்.சுப்பிரமணி, கே.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கௌரவத்தலைவர் பி.முனியாண்டி, செயற்குழு உறுப்பினர்கள் கே.அத்திக்கோம்பை எஸ்.கே.சி.கனகராஜ், காசிராஜன், ராஜா, பொன்ராம், நரசிம்மராஜா, காளிதாஸ், குமரேசன், ஜோதிமணி, சரவணன், பழனிச்சாமி, கருப்புச்சாமி, சிவக்குமார், குணசேகரன், மணி, சேகர், ஆனந்தகுமார், இளைஞரணி பொருப்பாளர்கள் செல்வராஜ், திருப்பதி, ராமச்சந்திரன், சதீஷ், நகர பொருப்பாளர்கள் தலைவர்  கே.கே.நகர் எஸ்.சின்ராஜ், துணைத்தலைவர் பி.ஆர்.சரவணன், துணைச்செயலாளர் பி.நாகராஜ் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் லெக்கையன்கோட்டை ஆர்.ராஜா நன்றி கூறினார்.

Spread the love