August 1, 2026

ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! 

ஒட்டன்சத்திரம் ஆகஸ்ட்-1

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி  பூட்டை உடைத்து‌ பீரோவிலிருந்த 32 1/2  பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து  ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன்  ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.   இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2  பவுன்  நகைகள் 280 கிராம்  வெள்ளி பொருட்களை போலீசார்  பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

Spread the love