ஒட்டன்சத்திரம், நவ.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தோட்டக்கலைத்துறை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தின் முன்பாக வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில், அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ள “வாய்மையே வெல்லும்” என்ற வாசகம் இடம்பெறாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
அரசுத் துறைகளின் அடையாளமாக விளங்கும் அரசு முத்திரையில் இடம்பெறும் “வாய்மையே வெல்லும்” என்ற வாசகம், அரசு அலுவலகங்களின் பெயர்ப் பலகைகளிலும் முறையாக இடம்பெற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு, அலுவலகத்தின் முன்புள்ள பெயர்ப் பலகையை ஆய்வு செய்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
26-11-2026
26-11-2026
மரணத்திலும் மனிதநேயம்: மருத்துவக் கல்விக்காக உடல் தானம்