ஒட்டன்சத்திரம் ஜன:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாலையோரங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் விபத்து அதிகரிக்கின்றன என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கடைகள்,தள்ளுவண்டிகள் ஆட்டோக்கள், மற்றும் இருசக்கர வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தப்படுவதால் வாகனங்கள் செல்ல போதிய இடஇன்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் சாலையை கடக்கும்போது பெரும் சிரமம் எதிர்கொள்கின்றனர்.இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கி பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்பு – விபத்து அபாயம்

More Stories
நீலகிரியில் ரூ.2.59 கோடி பணம், தங்கம் பறிமுதல்.. சுற்றுலா செல்பவர்கள் கவனமுடன் செயல்பட எச்சரிக்கை!
போத்தனூர் – கரூர் புதிய ரயில் பாதை: சேலம் கோட்டத்திற்கு பயணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு செய்த புகைப்படம்