October 13, 2026

கரூர் அக்12

கரூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் தோழர் களம் சார்பில் தந்தை பெரியாரின்148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமூக நீதி சமத்துவத்திற்கான பெரியார் நடை( மினி மாரத்தான்)போட்டி கரூர் லைட் ஹவுஸ் கார்னர் தந்தை பெரியார் சிலை முன்பு

கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜெகநாதன் வரவேற்பு உரையாற்றினார். பெரியார் நடை மினி மாரத்தான் போட்டியை தோழர் களம் நிறுவனரும் தலைவருமான தி.க.சண்முகம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ், பதக்கம்,பரிசுகளை ஏ.எஸ்.அபுல் ஹாசன் தலைவர் ஏ.ஆர்.எஸ் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனர், தோழர்களம் நிறுவனர் மற்றும் தலைவர் தி.க சண்முகம் ஆகியோர் வழங்கினர்.

 மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இரா. குடியரசு,மாவட்ட விடுதலை வாசகர் வட்ட தலைவர் ம. கண்ணதாசன், மாவட்ட காப்பாளர் வே.ராஜு, பொதுக்குழு உறுப்பினர்கள் சே. அன்பு,கட்டளை வைரவன், மாவட்டச் செயலாளர் ம.காளிமுத்து, சா.மோகன் மாநில தொழிலாளர் அணி செயலாளர்,  மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸ், நகர செயலாளர் ராஜா, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், செயலாளர் வடிவேல், கரூர் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜாமணி, மற்றும் தோழர் களம் அமைப்பின் சார்பில்  தலைமை நிலையச் செயலாளர் தமிழன் சு.கவின் குமார், மாநில அவை தலைவர் இரா ராஜகோபால் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Spread the love