July 28, 2026

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு போர் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் மரியாதை

கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் இந்திய ராணுவத்தின் தக் ஷின் பாரத பகுதியின் தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி மலர் வளையம் வைத்து உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: கார்​கில் போர் வெற்றி தினத்தை ஒட்டி சென்னை போர் நினை​வுச் சின்​னத்​தில் ராணுவ அதி​காரி​கள் மரி​யாதை செலுத்​தினர். ஆளுநர் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் புகழஞ்​சலி தெரி​வித்​தனர்.

கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்​தான் ராணுவம் ஜம்​மு-​காஷ்மீர் மாநிலத்​தின் கார்​கில் பகு​தி​யில் உள்ள டைகர் மலையை ஆக்​கிரமித்​தது. இதையடுத்து பாகிஸ்​தான் ராணுவத்தை எதிர்த்து இந்​திய ராணுவம் போரிட்​டது. மே மாதம் தொடங்​கிய போர் ஜூலை வரை நடை​பெற்​றது.

இப்​போரில் இந்​திய ராணுவம் வெற்றி பெற்​றது. ஜூலை 26-ம் தேதி கார்​கில் பகு​தி​யில் இந்​திய கொடியை நமது ராணுவம் நிலை​நாட்​டியது. இப்​போரில் 527 வீரர்​கள், தங்​களது இன்​னு​யிரை நாட்​டுக்​காக தியாகம் செய்​தனர்.

இதையடுத்து அவர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தும் வித​மாக ஆண்​டு​தோறும் ஜூலை 26-ம் தேதி கார்​கில் போர் வெற்றி தின​மாக நாடு முழு​வதும் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் கார்​கில் போரில் இந்​தியா வெற்றி பெற்று இந்த ஆண்​டுடன் 27 ஆண்​டு​கள் நிறைவடைகின்​றன.

இந்​நிலை​யில் இந்த ஆண்டு கார்​கில் போர் வெற்றி தின​மான நேற்​று, சென்னை ராஜாஜி சாலை​யில் அமைந்​துள்ள போர் நினை​வுச் சின்​னத்​தில் இந்​திய ராணுவத்​தின் தக் ஷின பாரத் பகு​தி​யின் தலைமை தளபதி லெப்​டினென்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி, தாம்​பரம் விமானப்​படை நிலை​யத் தலை​வர் ஏர் கமடோர் தபன் ஷர்​மா, தமிழகம் மற்​றும் புதுச்​சேரி கடற்​படை பொறுப்பு அதி​காரி கமடோர் சுவரத் மகோன் உள்​ளிட்ட முப்​படைகளை சேர்ந்த உயர் அதி​காரி​கள் மலர் வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தினர்.

நேற்றைய தினம் விடு​முறை நாள் என்​ப​தால் பள்ளி மாணவர்​கள் உள்​ளிட்​டோர் இந்த நிகழ்ச்​சி​யைப் பார்க்க பார்​வை​யாள​ராக அனு​ம​திக்​கப்​பட்​டிருந்​தனர். தொடர்ந்து கார்​கில் வெற்றி தினத்​தையொட்டி இருசக்கர வாக​னப் பேரணியை லெப்​டினென்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி தொடங்கி வைத்​தார்.

இதற்​கிடையே ஆளுநர், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளி​யிட்ட செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது: ஆளுநர் அர்​லேகர்: பகைவர்​கள் கார்​கில் பகு​தியை கைப்​பற்​றிய நிலை​யில், பாரதம் ஒன்​றிணைந்து ஆக்​கிரமிப்​பாளர்​களை அடித்து விரட்​டிய நாள். இன்​றைக்கு பாரதம் தற்​சார்பு நாடாக தழைத்​ததற்கு கார்​கி​லில் சிந்​திய குரு​தியே காரணம். கனவிலும் மறவோம் கார்​கி​லின் வெற்​றியை.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின்: கார்​கில் போரில் கடுமை​யான சூழலிலும் ஒப்​பற்ற துணிச்​சல், மன உறு​தி​யுடன் இந்​தி​யா​வைக் காத்த வீரர்​களுக்கு நம் இதயப்​பூர்​வ​மான அஞ்​சலியை செலுத்​து​வோம். நாட்​டுக்​காக தங்​கள் இன்​னு​யிரை ஈந்த மாவீரர்​களின் குடும்​பங்​களுக்கு நாம் என்​றும் கடமைப்​பட்​டுள்​ளோம்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: கார்​கில் வெற்றி தினத்​தில் நாட்​டின் பாது​காப்​புக்​காக தங்​களின் இன்​னு​யிரை அர்ப்​பணித்த அனைத்து தியாகி​களுக்​கும் அஞ்​சலி செலுத்​து​வோம். ஒப்​பற்ற வீரம், மன உறு​தி​யுடன் போ​ராடி நாட்​டின் இறை​யாண்​மை​யைக் காத்​த நம்​ வீரர்​களின்​ தி​யாகம்​ இந்​தி​ய வரலாற்​றில்​ என்​றென்​றும்​ நிலை​த்​திருக்​கும்​.

Spread the love