சென்னை: சென்னை கால்பந்து சங்கம் சார்பில் முதல் டிவிஷன் போட்டி செனாய் லயோலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பச்சையப்பன் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் ஏடிபி அணியை தோற்கடித்தது. அந்த அணி சார்பில் 47-வது நிமிடத்தில் கமலேஷும், 51-வது நிமிடத்தில் ஜீத்தும் கோல் அடித்து அசத்தினர்.
மற்றொரு ஆட்டத்தில் நேதாஜி எஃப்சி 4-1 என்ற கோல் கணக்கில் அசோக் லேலண்ட் அணியை வீழ்த்தியது. அந்த அணி தரப்பில் யோகேஷ் 2 கோல்களும் (45 மற்றும் 52-வது நிமிடங்கள்), ராஜ் a(5-வது நிமிடம்), தேவா (90-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

More Stories
செயின்ட் லூயிஸ் கிளப் செஸ் போட்டி – பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா
சிராஜின் மறக்க முடியாத ‘பவுல்டு’ – ஓவலில் இங்கிலாந்தின் இதயம் நொறுங்கிய இந்திய வெற்றி!
CWG 2026: மூட்டுவலியை வென்று பதக்கம் வென்ற சீமா