February 7, 2026

கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்கட்டமைப்புகளின் பராமரிப்பு பணிக்கு சிட்கோ-மாநகராட்சி ஒப்பந்தம்

கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்கட்டமைப்புகளின் பராமரிப்பு பணிக்கு சிட்கோ-மாநகராட்சி ஒப்பந்தம்

சென்னை: கிண்​டி, அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டைகளின் சாலை, மின்​விளக்​கு, திடக்​கழிவு மேலாண்மை உள்​ளிட்ட உள்​கட்​டமைப்​பு​களின் பராமரிப்பு பணி​களை மாநக​ராட்சி மேற்​கொள்​ளும் வகை​யில் சிட்கோவுடன் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழ்​நாடு சிறு​தொழில் வளர்ச்​சிக் கழகத்​தின் (சிட்கோ) கிண்​டி, அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டைகளில் ஏராள​மான தொழிற்​சாலைகள் உள்​ளன.

இங்கு லட்​சக்​கணக்​கானோர் பணிபுரி​கின்​றனர். இந்த நிலை​யில், தொழிற்​பேட்​டைகளின் உள்​கட்​டமைப்​பு​களை பராமரிக்க, சென்னை மாநக​ராட்சி சார்​பில் சிட்கோவுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அம்​பத்​தூர் தொழிற்​பேட்டை 1,167 ஏக்​கர் பரப்பு கொண்​டது. இங்கு 41.38 கி.மீ. நீளத்​தில் 128 சாலைகள், 1,558 தெரு விளக்​கு​கள், 8 உயர்​கோபுர மின்​விளக்​கு​கள், 84 கி.மீ. நீள மழைநீர் வடி​கால்​கள் உள்​ளன. இங்கு தின​மும் 40 இடங்​களில் குப்​பை சேகர​மாகின்​றது.

Read More

கிண்டி தொழிற்​பேட்டை 404.08 ஏக்​கர் பரப்பு கொண்​டது. இங்கு 15.28 கி.மீ. நீளத்​தில் 82 சாலைகள், 344 தெரு விளக்​கு​கள், 2 உயர்​கோபுர மின்​விளக்​கு​கள், 23.50 கி.மீ. நீள மழைநீர் வடி​கால்​கள் உள்​ளன. இங்கு தின​மும் 20 இடங்​களில் குப்​பை சேகர​மாகின்​றது.

தற்​போது மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மூலம் அம்​பத்​தூர், கிண்டி தொழிற்​பேட்​டைகளில் உள்ள சிட்கோவின் உட்​கட்​டமைப்​பு​கள் மாநக​ராட்சி சார்​பில் பராமரிக்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Spread the love