ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையம் அருகே, நகரில் தொடர்ந்து நிலவி வரும் மின்வெட்டு மற்றும் மின் கட்டண கணக்கீட்டில் நடைபெறும் குளறுபடிகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு, மின்வெட்டை உடனடியாக சரிசெய்யவும், மின் கட்டண கணக்கீட்டில் உள்ள முறைகேடுகளுக்கு தீர்வு காணவும் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதோடு, மின் கட்டண கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

More Stories
ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்,,
ஈரோடு மாவட்டம்
24-07-2026