November 2, 2026

குஜராத்: தீபாவளி கொண்டாட 143 கைதிகளுக்கு 15 நாள் பரோல்

காந்திநகர்: தீபாவளிப் பண்​டிகையைக் குடும்​பத்​தினருடன் விமரிசையாகக் கொண்​டாடும் வகை​யில், மாநிலத்​தின் பல்​வேறு சிறைகளில் அடைக்​கப்​பட்​டுள்ள 60 வயதைக் கடந்த 103 முதியவர்​கள் மற்​றும் 40 பெண் கைதி​கள் என மொத்​தம் 143 தகுதியுள்ள கைதி​களுக்கு 15 நாட்​கள் பரோல் வழங்கி குஜராத் அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

மாநில துணை முதலமைச்​சர் ஹர்ஷ் சங்​க​வி​யின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பரோலுக்கு ஒப்​புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிறை சீர்​திருத்​தம் மற்​றும் கைதி​கள் நலத்திட்​டத்​தின் ஒரு பகுதியாக குஜராத் அரசு இந்த முடிவை எடுத்துள்​ளது.

Spread the love