சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜைக் காலத்தையொட்டி, தமிழக பக்தர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், தமிழக–கேரள எல்லையான களியக்காவிளை மற்றும் சபரிமலை சன்னிதானத்தில் இம்மையங்கள் செயல்படுகின்றன.
பயணத் தகவல்கள், சந்தேகங்களுக்கான விளக்கங்கள் மற்றும் அவசர உதவிகளை பக்தர்கள் பெறலாம். சென்னை மையத்தை 1800 425 1757 என்ற கட்டணமில்லா எண்ணிலும், களியக்காவிளை மையத்தை 98944 33179, 87606 68834, 94862 70443 ஆகிய எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.
சபரிமலை தகவல் மையத்தில் அரசு அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். யாத்திரைக் காலம் முழுவதும் பக்தர்களுக்கு உதவ அவர்கள் முகாமிட்டிருப்பார்கள். சபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் இந்தச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்களின் பயணத்தை எளிதாக்கவும், தேவையான உதவிகளை உடனுக்குடன் வழங்கவும் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
சொத்து ஆவணங்கள் இனி தபாலில்! தமிழக அரசு
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.7,000 ஆக உயர்வு
கம்யூனிஸ்ட் தலைவருக்கு கார்ப்பரேட் வாழ்க்கையா? வெங்கடேசனுக்கு நீதிபதி கேள்வி