புடாபெஸ்ட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உள்ள புஷ்காஸ் மைதானத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) – ஆர்செனல் அணிகள் மோதின. ஆர்செனல் அணி தரப்பில் 6-வது நிமிடத்தில் ஹைவெர்ட்ஸும், பிஎஸ்ஜி அணி அணி சார்பில் 65-வது நிமிடத்தில் டெம்பெலேவும் கோல் அடித்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் இரு அணி தரப்பிலும் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட்அவுட்டில் பிஎஸ்ஜி அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

More Stories
ஹாக்கியில் இந்திய அணிக்கு 2-வது வெற்றி
ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது ஆர்சிபி – இறுதியில் குஜராத் அணியை வீழ்த்தியது எப்படி?
ரபாடா பந்தில் ஹெல்மெட்டில் அடிவாங்கிய பிறகு வெகுண்டெழுந்த வைபவ் சூரியவன்ஷி!