லண்டன்: இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவை எதிர்த்து விளையாடினார்.
இதில் ஜன்னிக் சின்னர் 6-7 (7), 7-6 (2), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஜன்னிக் சின்னர் பட்டம் வெல்வது இது 5-வது முறையாகும். சாம்பியன் பட்டம் வென்ற ஜன்னிக் சின்னருக்கு கோப்பையுடன், ரூ.44.80 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

More Stories
லார்ட்ஸ் போட்டியின் இடையே ஒளிபரப்பான இம்ரான் கான் மகன்களின் பேட்டி: களமாட மறுத்த பாகிஸ்தான்
பிரக்ஞானந்தா சாம்பியன்: கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்று அசத்தல்
மகளிர் டி20-ல் டிஎன்சிஏ லெவன் வெற்றி