புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸுக்கு மும்பை போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சிஜேபி இயக்கம் குறித்து உரையாற்றுவதற்காக புறப்பட்ட சவுரவ் தாஸ், கடந்த 23-ம் தேதி இரவு டெல்லி விமான நிலையத்தில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களில் அவரது பிறப்பிடம் குறித்த தகவல்களில் முரண்பாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சவுரவ் தாஸ் மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே, நேற்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் மஹாஜன் முன்னிலையில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், சவுரவ் தாஸுக்கு எதிராக மும்பை போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்ததாகவும், அதற்கு அவர் உரிய பதிலளிக்கவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்தவொரு தகவலும் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என சவுரவ் தாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபியின் போராட்டங்களின்போது, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More Stories
உ.பி.யில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை – சமாஜ்வாதி தேர்தல் அறிக்கை அம்சங்கள்
60 டன் தங்கம் நாடு திரும்பியது!6 மாதங்களில் ஆர்.பி.ஐ. அதிரடி!மொத்த இருப்பு 880 டன்!84% தங்கம் இந்தியாவில்!
தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு