April 10, 2026

சு.முத்துச்சாமி கொல்லம்பாளையம் பகுதியில் வீடு வீடாக நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கழக வேட்பாளர் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சு.முத்துச்சாமி கொல்லம்பாளையம் பகுதியில் வீடு வீடாக நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். அவர் செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஆ செந்தில்குமார் கொல்லம்பாளையம் பகுதி கழக செயலாளர் க. லட்சுமண குமார், மாமன்ற உறுப்பினர் எம் என். ராமலிங்கம், வட்ட செயலாளர் மெடிக்கல் சங்கரன், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Spread the love