September 9, 2026

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.1,13,160-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.1,13,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.14,145க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,270க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல நேற்று சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

Spread the love