கோடைக் காலம் உச்சம் தொட்டுள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சேலம் வழியாக இரண்டு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது எந்தெந்த நாட்களில், யாருக்கெல்லாம் பயனளிக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.
கொங்கு மண்டலத்தை தலைநகர் சென்னை உடன் இணைக்கும் வகையில் தெற்கு ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தற்போது கோடைக் காலம் நடைபெற்று வரும் நிலையில் பயணிகள் பலரும் வெளியூர் பயணங்களை மேற்கொள்வர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்கள், சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் வழியாக இரண்டு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
சேலம் வழியே 2 சம்மர் ஸ்பெஷல் ரயில்கள்
- 06026/ 06025 ஈரோடு – சென்னை சென்ட்ரல் – போடனூர்: ஏப்ரல் 30 காலை 9.20 மணிக்கு ஈரோட்டில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. மறுமார்க்கத்தில் மாலை 6.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 5.15 மணிக்கு போடனூர் வருகிறது. இந்த ரயிலில் 2 ஏசி சேர் கார், 8 சேர் கார், 4 ஜெனரல் செகண்ட் கிளாஸ், 2 செகண்ட் கிளாஸ் ஆகிய பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
- 06028/ 06027 போடனூர் – சென்னை – போடனூர்: மே 2, 3 ஆகிய தேதிகளில் போடனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் மாலை 6.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 5.15 மணிக்கு போடனூர் போய் சேர்கிறது. இதிலும் மேற்கண்டவாறு ஏசி சேர், சேர் கார், செகண்ட் கிளாஸ், திவ்யங்ஜன் ஃபிரண்ட்லி செகண்ட் கிளாஸ் பெட்டிகள் இடம்பெற்றுள்ளன.
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட், கோவை ஜங்ஷன் நெருக்கடி
கோவை, சேலத்தில் இருந்து சென்னை வர விரும்புவோர் சேரன் அல்லது கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் முன்பதிவு செய்து பயணிப்பர். ஆனால் இந்த ரயில்களில் பல வாரங்களாக டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டிலேயே இருக்கும். இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வேயின் சிறப்பு ரயில்கள் பலனளிக்கும். மேலும் கோவை ஜங்ஷனில் ஏற்படும் நெருக்கடியை குறைக்கும் வகையில், போடனூரில் இருந்து ரயில்கள் இயக்கப்படுவது பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
மேலும் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்களின் வேகத்தில் பயணிப்பதால் குறைந்த கட்டணத்தில் பயணிகள் விரைவாக சென்றடையலாம்.
| ரயில் எண் & பெயர் | பயணம் | 2S டிக்கெட் விலை | CC டிக்கெட் விலை |
| 06028 PTJ MAS SPECIAL | சேலம் டூ சென்னை | ரூ.160 | ரூ.640 |
ஈரோடு, போடனூர் ரயில் பெட்டிகள் விவரம்
மேற்கொண்ட இரண்டு ரயில்களிலும் 6 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கின்றன. இதில் 4 பெட்டிகள் ஜெனரல் செகண்ட் கிளாஸ் என்பதால் அனைத்து தரப்பினரும் ஏறிக் கொள்ளலாம். எஞ்சிய 2 பெட்டிகள் திவ்யங்ஜன் ஃபிரண்ட்லி பெட்டிகள் என்பது கவனிக்கத்தக்கது. அதாவது மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை. அகலமான கதவுகள், அகலமான கழிவறைகள், வீல் சேர்கள் வைக்கும் வகையில் குறைந்த இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும். இதனை SLRD என்று பெட்டியில் குறிப்பிட்டிருப்பர்.

More Stories
தமிழர் உயர்வுக்கு வழிகாட்டியவர் பாரதிதாசன்: 136-வது பிறந்தநாளில் முதல்வர், தலைவர்கள் புகழாரம்
ஆதார், பான் எண்ணைத் திருடி நூதன மோசடி: ரூ.4.70 கோடி ஜிஎஸ்டி செலுத்துமாறு ஓட்டுநருக்கு நோட்டீஸ்
கொடைக்கானலில் 4 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு சென்னை புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்