April 7, 2026

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அருள்மிகு மண்டு கருப்பு அருள்மிகு காளியம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

சோழவந்தான் ஏப்ரல் 7 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அருள்மிகு மண்டு கருப்பு அருள்மிகு காளியம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த வாரம் செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு வந்தது. திங்கட்கிழமை குத்து விளக்கு பூஜை நடைபெற்றது தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை வைகை ஆற்றில் இருந்து அதிர்வேட்டுக்கள் மேளதாளம் முழங்க பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து கிராம முக்கிய வீதிகளில் வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலக்கால் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கருப்பு மற்றும் அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் நெய் பஞ்சாமிர்தம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து திருக்கோவில் முன்பாக அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. தொடர் செவ்வாய் இரவு சக்தி கரகத்துடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. புதன்கிழமை அம்மனுக்கு பொங்கல் வைத்து சக்தி கிடா வெட்டுதல் மாவிளக்கு வீதி உலா வருதல் நடைபெற உள்ளது வியாழக்கிழமை சக்தி கிரகம் ஆற்றில் கரைத்தல் வியாழன் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது விழாவிற்கான ஏற்பாடுகளை மேலக்கால் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Spread the love