சோழவந்தான் மே 19
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேல் நாச்சிகுளம் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் அருள்மிகு மலையாள கருப்பண்ணசாமி அருள்மிகு காளியம்மன் அருள்மிகு சீனிவாச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவையொட்டி ஸ்ரீ நரசிங்க பெருமாள் உபாசகர் பிரம்ம சீனிவாச சர்மா தலைமையில் யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என மனம் உருகி வேண்டினர் தொடர்ந்து பால் தயிர் வெண்ணெய் நெய் பஞ்சாமிர்தம் இளநீர் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முதன்மை காரர்கள் கிராம பொதுமக்கள் கிராம இளைஞர்கள் மற்றும் கும்பாபிஷேக விழா குழுவினர் செய்தனர் இதில் சோழவந்தான் கருப்பட்டி நாச்சிகுளம் கரட்டுப்பட்டி இரும்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . சோழவந்தான் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்

More Stories
உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: வீரபாண்டியன் வலியுறுத்தல்
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது மே 27 இல் பூக்குழி ஜூன் 2ல் தேரோட்டம் நடைபெற உள்ளது
சோழவந்தான் அரிமா சங்கத் தலைவராக தொழிலதிபர் எம் வி எம் மருது பாண்டியன் மூன்றாவது முறையாக தேர்வு