சோழவந்தான் மே 11
மதுரை மாவட்டம் சோழவந்தானில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றத்தை தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது கோவில் முன்பாக இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வட்ட பிள்ளையார் கோவில், முதலியார் கோட்டை பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெடி வெடித்தும் இனிப்பு வழங்கியும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கொண்டாடினர். மதுரை மாவட்ட செயலாளர்கள் கல்லாணை விஷால் கிருஷ்ணா ஆகியோர் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேட்டை கல்லாணை, ராமநாதன் முத்துப்பாண்டி சப்பானி கார்த்தி சரவணன் பெரியசாமி டிராக்டர் சரவணன் குருசாமி இளவரசன் பிருத்திவிராஜ் மற்றும் நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
25-06-2026
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் பணியாண்டப்பள்ளி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணம் வழங்கும் விழா
25-06-2026